“ஸ்ரீரங்கம் – இது நம்பெருமாளின் ‘லீலா விபூதி’ என்று ஆசார்யர்கள் போற்றுகின்றனர்!” என்பதை ப்ரதிபலிக்கும் நூல். “அம்மாளிடமும், அம்மானிடமும், அம்மாவிடமும்” அனுக்ரஹம் பெற்ற வேதாந்த தேசிகனுடன் நம்பெருமாள் நிகழ்த்திய பல்வேறு திருலீலைகள் நிறைந்த காலத்திற்கு இந்நூல் அழைத்துச் செல்லும். ஸ்ரீரங்கத்தின் வரலாற்றில் பலருக்கும் தெரியாத முக்கிய நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன! இந்நூல் நம்பெருமாள் மற்றும் ஸ்வாமி தேசிகனுடன் ஒரு ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும். வார்த்தைகளால் விவரிக்க இயலாது; வாசித்துத்தான் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும்! குதூகலமாய்த் தொடங்கி ,பரவசமடைந்து, பிரிவு ஏற்பட்டாலும் மீண்டும் சுபமாக நம்பெருமாளும் அவரின் பாதுகா-சேவகரும் ஒரே நேரத்தில் எப்படி ஸ்ரீரங்கவிஜயம் செய்தனர்! என்பதை ஸ்வாரஸ்யம் குறையாமல் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் ஸ்ரீ உ வே வாஸுதேவாசார்யார் ஸ்வாமி






Reviews
There are no reviews yet.